முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வேளாண் பட்ஜெட்டில் கரும்பு சாகுபடியை மேம்படுத்த 20.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      தமிழகம்
MRK 2023-02-20

Source: provided

சென்னை : கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நேற்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் வேளாண் பட்ஜெட் அறிவிப்பில் கூறியதாவது, சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும். ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து