முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாருக்கான், நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே திரைப்பட விருதுகள்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024      இந்தியா
Nayanthara

Source: provided

புதுடெல்லி:2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.

இதில் ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருதும் நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநர் விருது அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவிற்கும் சிறந்த வில்லன் விருது பாபி தியாலுக்கும் (அனிமல்) கொடுக்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கு (ஜவான்) வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநர் (விமர்சகர்கள் பரிந்துரை) விருது அட்லிக்கு கொடுத்தனர்.

இசைத்துறையில் செய்த மிகப்பெரிய பங்களிப்புக்காக ஜேசுதாஸுக்கும் விருது அறிவிக்கப்பட்டது.

மேலும், சிறந்த நடிகர் (விமர்சகர்கள் பரிந்துரை) விக்கி கௌஷல் (சாம் பகதூர்), சிறந்த நடிகை ராணி முகர்ஜி (மிசஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே) ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டது.

சிறந்த படமாக 12த் பெயில் (12th fail) படமும் சிறந்த இணையத் தொடராக ஃபார்சி (farzi) தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து