முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      உலகம்
england-parliament

லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தஞ்சம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். எனவே, சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

2022-ல் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது இதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வரும் புலம்பெயர்ந்தோரை தடுக்கவும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் வணிகத்தை முறியடிக்கவும் ருவாண்டா திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து இந்த விவகாரம் சர்ச்சையில் சிக்கியது. சட்டப் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த கொள்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. ஏனென்றால் புலம்பெயர்ந்தோர் தங்கள் தாய்நாடுகளுக்கு அல்லது அவர்கள் தவறாக நடத்தப்படும் ஆபத்தில் இருக்கும் பிற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது, புலம்பெயர்ந்தோர் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதை தடுக்கும் வகையில் ருவாண்டாவுடன் ரிஷி சுனக் புதிய ஒப்பந்தம் செய்தார். 

இந்நிலையில், புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு விமானங்களில் அனுப்பும் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் கூறி உள்ளார். இந்த புதிய சட்டம், சிறிய படகுகளில் மக்கள் ஆங்கில கால்வாய் வழியாக நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்ற உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த மசோதா இந்த வார இறுதியில் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களை அரசு பிடித்து வைக்கத் தொடங்கும். இது, சட்ட போராட்டம் தீவிரமடைய வழிவகுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து