எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் படைவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று (20-ம் தேதி) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |