முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புணே சொகுசு கார் விபத்து வழக்கு: ஓட்டுநரை சரணடைய செய்ய முயற்சி: காவல்துறை தகவல்

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      இந்தியா
Pune-Car-Accident

புணே, மகாராஷ்டிர மாநிலம் புணேவில், குடிபோதையில் கார் ஓட்டி சிறுவன் ஏற்படுத்திய விபத்தில், இரண்டு பேர் பலியான நிலையில், கார் ஓட்டுநரை, இந்த விபத்தில் சரணடைய முயற்சிகள் நடந்திருப்பதாக புணே காவல்துறை தெரிவித்துள்ளது.

17 வயது சிறுவனுக்கு பதிலாக, அவர்களது கார் ஓட்டுநர், தானே இந்த விபத்தை ஏற்படுத்தியதாகக் காவல்துறையிடம் சரணடைய வைக்கவும், விபத்து நேரிட்டதும், ஓட்டுநர் உடனடியாக அருகில் இருந்த ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொள்ளும்படியும் சிறுவனின் பெற்றோர் அறிவுறுத்தியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில், ஓட்டுநர், தானே வாகனத்தை இயக்கியதாகக் கூறியுள்ளார். பிறகுதான் சிறுவன் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதில், ஓட்டுநருக்கு யார் அழுத்தம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்களை காவல்துறையினர் அணுகும்போது, வெளியே என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலையில் சிறுவர்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகறிது.

மதுபோதையில், மிகவும் குறுகிய சாலையில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த சிறுவன் காரை இயக்கியிருக்கிறார். குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனுக்கு வழங்கப்பட்ட பிணையும் ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து