முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கால்சியம் சத்துகள் நிறைந்த 14 இயற்கை உணவுகள்

  • கால்சியம் சத்து வலுவான நமது எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
  • கால்சியம் சத்துக்களை நாம் அதிகம் பெற சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.

1.பாதாம்பருப்பை நாம் சாப்பிட்டால் நமக்கு கொலஸ்ட்ரால் சத்து கூடும்,அந்த கொலஸ்ட்ரால் சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து நமக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 20 பாதம்பருப்பை பிரித்து வாரம் முழுவதும் சாப்பிடுவது நல்லது, உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்பை வெளியேற்றி விட்டு நல்ல கொழுப்பு உருவாகவும் அதன் மூலம் கால்சியம் சத்து அதிகரிக்கவும் பாதாம்பருப்பு உதவுகிறது.

2.சோயா பாதம்பருப்பிற்கு அடுத்த நிலையில் உள்ளது,இதை அவித்து சாப்பிடவேண்டும்,இதன் மூலம் நமக்கு நல்ல கொழுப்பு கிடைத்து கால்சியம் சத்து அதிகரிக்கிறது.

3.பால் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 73 சதவீதம் கால்சியம் சத்து கிடைக்கிறது,தயிர்,மோர் என பல்வேறு வகையில் பாலை சாப்பிட்டாலும் பாலாக சாப்பிடுவது நல்ல பயனை தருகிறது,பாலுடன் பாதம் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் 100 சதவீதம்  கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது.

4.உளுந்தங்களியை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தருவதால் அவர்கள் எலும்புகள் பலமடையும்,எலும்புகளுக்கு பலம் தரும் உளுந்தை 40 வயதிற்கு மேல் களி செய்தும் கஞ்சி செய்தும் சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.

5.பட்டாணியை சாப்பிடுவதன் மூலம் நமக்கு அதிகமான அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது.

6. ஆரஞ்சு பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரித்து எலும்பிற்கு தேவையான பலத்தை தருகிறது. ஆரஞ்சு பழத்தை சாறாக சாப்பிட்டாலும் அப்படியே சாப்பிட்டாலும் நமக்கு அதிக சக்தியை தருகிறது.

7.பீன்ஸ் கல் அடைப்பில் இருந்து நம்மை காக்கிறது,மேலும் பீன்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகளையும் பலமடைய செய்கிறது.

8.கேழ்வரகை சாப்பிட்டால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகள் வலுவடையும்,கேழ்வரகில் புரோட்டின், கார்போஹைட்ரேட்,மக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,இதை கூழாக சாப்பிட்டாலும் அவித்து சாப்பிட்டாலும் நமது எலும்புகளுக்கு அதிக பலம் கிடைக்கிறது.

9.அனைத்து வகையான கீரைகளும் எலும்பு பலத்துக்கு உதவுகிறது,அரைக்கீரை,முருங்கைக்கீரை என எந்த கீரை கிடைத்தாலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.

10.பதநீரும் கல்லடைப்பை நீக்குகிறது மற்றும் கிட்னியை சுத்தப்படுத்துகிறது,பதநீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் உடலை பலப்படுத்துகிறது,48 நாட்கள் ஒரே மர பதநீரை சாப்பிட்டு வந்தால் தீராத வியாதிகளும் தீரும்,அதிக அளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளும் பலமடைகிறது.

11. இலந்தை பழம் கண் நோயை குணப்படுத்துகிறது,இந்த பழத்தை சாப்பிடுவதால் 40முதல் 60 சதவிதம் கால்சியம் சத்து நமது உடலில் உடனே சுரப்பதால் அது எலும்பையும் பலமடைய செய்கிறது.

12. எள்ளில் 69 சதவீதம் கால்சியம் சத்து உள்ளது, இதை பயன்படுத்தி தயார் செய்யப்படும் நல்லெண்ணெய்யை சாப்பிடுவதால் உடல் பொலிவடைகிறது மற்றும் எள்ளில் உள்ள கால்சியம் சத்து எலும்பையும் பலமடைய செய்கிறது.

13. ஓட்சில்  கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதன் மூலம் அதிக கால்சியத்தை பெற்று எலும்புகள் பலமடைவதை உணரலாம்.இதில் உள்ள தாது உப்புகள் நமது உடலை பலப்படுத்துகிறது.

14. கடல் வாழ் மீனில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளது.விபத்தின் மூலம் எலும்பு பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்பின் பலம் அதிகரித்து அவர்கள் உடல் பலமடைய மீன்  உதவுகிறது.

  • இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று அதன் மூலம் எலும்புகளை பலமடைய செய்து வாழ்வில் நலம் பெறுவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago