முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச எம்.பி. கொலை வழக்கு: பெண் ஒருவரிடம் விசாரணை

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      உலகம்
Suicide 2023 04 29

டாக்கா, வங்கதேச எம்பி அன்வருல் அஸீம் அனார் கொலை வழக்கில், அந்நாட்டு பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் வங்கதேச போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வங்கதேச ஆளும் கட்சி எம்பி- அன்வருல் அஸீம் அனார் (56), கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை டாக்காவில் கைது செய்துள்ளதாக வங்கதேச அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொலை செய்யப்படுவதற்கு முன்பு எம்பி- அன்வருல் அஸீம், மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்த நிலையில் இங்குள்ள நியூடவுண் பகுதியில் ஒரு அடிக்குமாடி குடியிருப்பில் 2 ஆண்கள், ஒரு பெண்ணுடன் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் கடந்த 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை எம்பி அன்வருல் அஸீமை தவிர, மற்றவர்கள் அடுத்தடுத்து அந்த குடியிருப்பிலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது. எனவே, பெண்ணை பயன்படுத்தி, அன்வருல் அஸீமுக்கு வலைவிரித்து, அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஷிலாந்தி ரஹ்மான் என்ற வங்கதேசத்தை சேர்ந்த அந்தப் பெண்ணை, அந்நாட்டு போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள அன்வருல் அஸீமின் நெருங்கிய நண்பர், அவரை கொலை செய்ய ரூ.5 கோடி பணம் கொடுத்துள்ளதும், கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க நண்பரின் வாடகை வீட்டில்தான் அன்வருல் அஸீம் கொலை சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த அமெரிக்க நண்பருடன் தற்போது போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள ஷிலாந்தி ரஹ்மான், தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து