முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபா நகரம் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, 25 மே 2024      உலகம்
UNO-2023 04 06

நியூயார்க், ரபா மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

ஆனால் ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறோம். இனப்படுகொலை நடைபெறவில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்தது. தற்போது பாலஸ்தீன மக்கள் அதிகமாக வசித்து வரும் ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிக அளவில் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காசாவில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ரபா மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் இஸ்ரேல் இந்த உத்தரவை பின்பற்ற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றால், உலக நாடுகளால் தனித்து விடப்படும் அபாயம் ஏற்படும் என்றே கருதப்படுகிறது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து