முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை  பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அனைவருக்கும் கல்வி திட்டம் ஒன்று. இத்திட்டத்தின் மூலம் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். 

அதே போல் தமிழக அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களை பயிற்றுவிக்க தொகுப்பூதிய முறையில் சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதற்கென ரூ.21.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1009 பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து