முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியில் சாம்சன் ஏன் இடம்பெறவில்லை? - சுனில் கவாஸ்கர் விளக்கம்

சனிக்கிழமை, 25 மே 2024      விளையாட்டு
Gavaskar 2023 06 09

Source: provided

மும்பை : சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாத சஞ்சு சாம்சன் தவறான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை இழந்ததே ராஜஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

ஐதராபாத் வெற்றி...

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 2-வது தகுதி சுற்று (குவாலிபயர் 2) போட்டியில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வீழ்த்தியது. இந்த போட்டியில் பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் சாம்சன் 10 ரன்களில் (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாத சஞ்சு சாம்சன் தவறான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது ராஜஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

என்ன பயன்..? 

இப்படி அழுத்தமான சூழ்நிலையில் சொதப்புவதாலேயே இந்திய அணியிலும் அவர் இன்னும் பிரகாசிக்கவில்லை என்றும் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் 2024 டி20 உலகக்கோப்பையில் இதேபோல சொதப்பாமல் அவர் அசத்துவார் என்று நம்புவதாக கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உங்களுடைய அணி கோப்பையை வெல்லா விட்டால் இந்த வருடம் நீங்கள் 500 ரன்கள் அடித்து என்ன பயன்? ஒவ்வொரு முறையும் முக்கியமான நேரத்தில் அவர் தவறான ஷாட்டை அடித்து அவுட்டாகிறார். 

கேரியர் நீண்டு... 

ஏன் சாம்சன் இதுவரை இந்தியாவுக்காக சரியான கெரியரை கொண்டிருக்கவில்லை? ஏனெனில் அவருடைய தவறான ஷாட் செலக்சன் அவரை கீழே தள்ளுகிறது. ஒருவேளை ஷாட் செலக்சன் நன்றாக இருந்திருந்தால் அவருடைய இந்திய கேரியர் நீண்டதாக இருந்திருக்கும். இந்த சூழ்நிலையில் டி20 உலகக்கோப்பையிலாவது அவர் தன்னுடைய வாய்ப்பை 2 கைகளால் இறுக்கமாக பிடித்து அணியில் தனது இடத்தை உறுதியாக்குவார் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து