எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கினர்.
இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்ட்யா, அமெரிக்கா சென்ற வீரர்களுடன் பயணிக்கவில்லை. இது தொடர்பாக பல வதந்திகள் பரவின. இந்நிலையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா, தனது எக்ஸ் பக்கத்தில், " தேசிய கடமையில்" எனும் தலைப்பில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
__________________________________________________________________
அம்பத்தி ராயுடு கணிப்பு
20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. வருகிற 1-ந்தேதி தொடங்கும் இந்த போட்டிக்காக எல்லா அணிகளும் முழுவீச்சில் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. இந்த தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவரது கணிப்பின் படி, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார்.
__________________________________________________________________
இது ரிங்கு சிங்கின் ஆசை
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதன்மை இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ரிசர்வ் வீரராக மட்டுமே ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டது அவருக்கு வருத்தம் அளித்திருந்தாலும் அடுத்து தன்னுடைய இலக்கு என்ன? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் பேட்டிங் வரிசையில் கீழேதான் இறங்கி பேட்டிங் செய்து வருகிறேன். அணிக்கு எது நல்லது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு பேட்டிங் செய்ய அதிகளவு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதுதான் உண்மை.
அதேவேளையில் நான் சரியாக பேட்டிங் செய்தேனா? இல்லையா? என்பது முக்கியமல்ல அணியின் நலனுக்காக நான் பின் வரிசையில் களமிறங்கி வெற்றிக்காக போராட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம். என்னை பொறுத்தவரை எங்கு களமிறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். நான் எப்போது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். அணிக்கு அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதனை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வேன். மேலும் அவர் தெரிவிக்கையில்., டி20 போட்டிகளில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட அனைவருக்குமே வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று கூறினார்.
__________________________________________________________________
கோலி, ஜெய்ஸ்வால் குறித்து ஜாபர்
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் “கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்க வேண்டும் என்பது எனது கருத்து என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்., பேட்டிங் ஆர்டரில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆடாலம். ரோகித், சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆடுவார். அதனால் அவருக்கு அந்த இடத்தில் ஆடுவதில் சிக்கல் இருக்காது” என்றார்.
இந்தியா உட்பட 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. மொத்தம் 55 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது. இந்திய அணி: ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், சிராஜ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
24 Oct 2025மேட்டூர்: வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பட்டுள்ளதை அடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி உள்ளிட
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


