முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 18-ம் தேதி வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024      இந்தியா
Modi-1 2023 04 03

வாரணாசி, பிரதமராக பதவியேற்ற பிறகு வரும் 18-ம் தேதி பிரதமர் மோடி, அவரது தொகுதியான வாரணாசிக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் விவசாயிகள் கூட்டத்தில்  உரையாற்ற உள்ளார்.

உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 9-ம் தேதி பிரதமராகவும் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3-வது பிரதமராக பதவியேற்ற பெருமை மோடிக்கு கிடைத்து உள்ளது.

இந்நிலையில், வரும் 18-ம் தேதி வாரணாசியில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதன் பிறகு காசி விஸ்வநாதர் கோயில் சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். தஷேஸ்வமத் படித்துறையில் நடக்கும் கங்கா ஆரத்தியிலும் மோடி பங்கேற்கிறார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவது அவசியம். மற்றவர்களை யோகா செய்ய, ஊக்குவிப்பதும் அவசியம். யோகா அமைதி மற்றும் தைரியத்துடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து