எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தற்போது வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.
இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் 2024-25 ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாயில், 22 இனங்களுடன் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும்.
மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது பசுந்தாளுரப் பயிர்கள். இதன் சாகுபடியை விவசாயிகளிடத்தில் ஊக்குவித்திட ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஏக்கரில் 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகளை முதல்வர் வழங்கி, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.
வேளாண்மை - உழவர் நலத்துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண் இயந்திரங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் காரணத்தால், அவற்றைக் கடைகோடியில் இருக்கும் சிற்றூருக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பு அரசுக்கு இருப்பதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வட்டார அளவில் வேளாண் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவும்பொருட்டு, டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், எந்திரக் கலப்பைகள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு துறையின் இ-வாடகை செயலியின் மூலமாக குறைந்த வாடகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 10.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 90 டிராக்டர்கள், 180 கொத்துக் கலப்பைகள் மற்றும் 90 ரோட்டவேட்டர்கள் ஆகியவற்றினை அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக முதல்வர் டிராக்டர்களை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேளாண்மை - உழவர் நலத்துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன்வாய்ந்த ஓட்டுனர்களை உருவாக்கிட டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
14 Jun 2025துபாய் : துபாயில் உள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பு உள்ளது இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு 274 ஆக உயர்வு
14 Jun 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
-
பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
14 Jun 2025சென்னை, வீடு வழங்கும் திட்டம், மீன்வளத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பிரதமர் முகத்தைத் தாங்கி செயல்படும் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என முதல்வர் மு.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Jun 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ரூ.74 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆன நிலையில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது.&nbs
-
முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி
14 Jun 2025சென்னை : உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மடிக்கணினி வழங்கி, மேலும் வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையையும் வழங்கிய முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி தெரிவித்த
-
ஏவுகணை வீசினால் தெஹ்ரான் எரியும்: ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
14 Jun 2025டெல் அவிவ் : ஏவுகனணகளை வீசினால் தெஹ்ரான் எரியும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
ஒடிசா: பாதுகாப்புப்படை வீரர் பலி
14 Jun 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் நக்தலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலியானார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் பலி-320 பேர் படுகாயம்
14 Jun 2025இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்து உள்ளனர். 320-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
14 Jun 2025தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
14 Jun 2025டெஹ்ரான் :: ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருவதை முன்னிட்டு இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி
14 Jun 2025சென்னை, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் நேற்று வெளியிடப்பட்டது.
-
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
14 Jun 2025சென்னை, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு
14 Jun 2025சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் 3 பேர் பலி
14 Jun 2025ஜெருசலேம் : இஸ்லே் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனில் தொடர் தாக்குதல்: மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
14 Jun 2025மாஸ்கோ : உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வருவதை முன்னிட்டு மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா.
-
10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி - ஒரு டிரா: ஆதிக்கம் செலுத்தும் பவுமா
14 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
-
நீலகிரிக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்’ 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
14 Jun 2025சென்னை, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
விமான விபத்து: 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்
14 Jun 2025காந்திநகர் : 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ.
-
சப்-கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது
14 Jun 2025சென்னை, சப்-கலெக்டர், டி.எஸ்.பி.
-
நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு: மொத்தம் 210 வேலை நாட்கள்
14 Jun 2025சென்னை, நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Jun 2025சென்னை : காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காவல் நிலையம் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
14 Jun 2025சென்னை, வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதி.மு.க.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி
14 Jun 2025திருச்சி : வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
-
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து கார்கே ஆறுதல்
14 Jun 2025காந்திநகர் : விமான விபத்தில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் தலைவர் கார்கே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
இஸ்ரேல் தொடர் தாக்குதல்: காசாவில் 16 பேர் பலி
14 Jun 2025காசா சிட்டி : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.