முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆனது

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

மங்காப்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓர்அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமார்200 பேர்வசித்து வந்தனா். இந்தக் குடியிருப்பின் 6-வது மாடியில் உள்ள வீட்டின் நேற்று முன்தினம் அதிகலை சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.

தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர்உயிரிழந்தனா். அவா்களில் 42 பேர் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனர்என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலானோர்கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். அதேவேளையில், குடியிருப்பில் வசித்த பலர்பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மீட்புப் பணியின்போது 5 தீயணைப்பு வீரா்களும் காயமடைந்தனா்.

இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு என்பவர் தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வீராசாமி மாரியப்பன், முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, ராஜு எபினேசர் உள்ளிட்ட 7 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் பலியான தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தூதரகம் மூலம் முதல்கட்டமாக கிடைத்த தகவலின்படி தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக அயலக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை அவரது வீட்டில் சந்தித்து, தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். 

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உடல்களை மீட்டுத் தரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். குவைத் தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901

குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்காக அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குறித்த விவரங்கள் கிடைத்த பிறகு அவர்களது உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், காயமடைந்த தமிழர்கள் குறித்த விவரங்களை கண்டறிந்த பிறகு அவர்களது சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அயகலத் தமிழர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து