எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காத்மாண்டு : நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இடைவிடாமல் மழை பெய்த நிலையில், இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவின் இடிபாடுகளில் 2 வீடுகள் புதைந்தன. இதில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. அந்த குடும்பத்தினரின் சுமார் 50 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழிகளும் நிலச்சரிவில் சிக்கி இறந்து விட்டன.
மற்றொரு வீட்டில் இருந்தவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் ஒவ்வெரு ஆண்டும் பருவமழை காலத்தில் மழையால் பேரழிவுகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


