எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாடர்ஹில் : டி-20 உலகக்கோப்பை தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் இந்திய அணி மோதுகிறது.
4-வது லீக் போட்டி...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
2 புள்ளிகளுடன்...
இந்திய அணி பேட்டிங்கில் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியம். ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்து விட்டது. அந்த அணியில் ஆரோன் ஜான்சன், கிர்ன், கார்டன், பர்கத்சிங், கலீம் சானா ஆகிய வீரர்கள் உள்ளனர்.
தாயகம் திரும்பும்...
லாடர்ஹில்லில் மழை பெய்து வருகிறது. இதனால் இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே இந்திய அணியுடன் மாற்று வீரர்களாக சென்ற சுப்மன்கில், அவேஷ்கான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் மற்ற மாற்று வீரர்களான ரிங்குசிங், கலீல் அகமது ஆகியோர் அணியுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக இன்றைய போட்டி முடிந்தவுடன் சுப்மன்கில், அவேஷ்கான், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


