முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.,யில் கிரிக்கெட் சூதாட்டம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      விளையாட்டு
MP 2024-05-14

Source: provided

ம.பி.,யில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் படி 2 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர். 

இந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.

____________________________________________________________________

சூப்பர் 8 சுற்றில் ஆப்கான்

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரினிடாடில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

____________________________________________________________________

வங்கதேச அணி வெற்றி

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது.   ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.   இந்த தொடரில் நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – நெதர்லாந்து அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.  

இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்சேல் 18 ரன்களும்,  மேக்ஸ் ஓ டவுட் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர்.  இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங்,  26 ரன்களும்,  எங்கல்பிரிட் 33 ரன்களும் எடுத்து ரன்களை சேர்த்தனர்.  தொடர்ந்து,  ஒருசில ஓவர்களிலேயே அடுத்தடுத்த  விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி தடுமாறியது.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களே மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி சூப்பா் 8 சுற்றை நெருங்கியிருக்கிறது.

____________________________________________________________________

சாதனை பட்டியலில் நவீன் 

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரினிடாடில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுகள் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நவீன் உல் ஹக் படைத்துள்ளார். இந்த பட்டியலில் ரஷித் கான் (144 விக்கெட்) முதல் இடத்திலும், முகமது நபி (95 விக்கெட்) 2ம் இடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் (59 விக்கெட்) 3வது இடத்திலும், நவீன் உல் ஹக் (50 விக்கெட்) 4ம் இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து