எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : தவறுதலாக அதிக பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை திருப்பி தர வேண்டும் என முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த நோட்டீசை டுவிட்டர் நிறுவனத்தின் மனித வள மேலாண்மைத்துறை ( எச்ஆர்) இமெயில் மூலம் அனுப்பி உள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க டாலரில் இருந்து ஆஸ்திரேலிய டாலருக்கு பணத்தை மாற்றும் போது சில தவறு ஏற்பட்டு விட்டது. இதனால், அதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான அந்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டும்.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் குறிப்பிடும்படியாக அதிக தொகையை உங்களுக்கு கொடுத்து விட்டோம். முடிந்த வரையில், இந்த பணத்தை திருப்பி அனுப்பினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
6 பேருக்கு இத்தகைய நோட்டீஸ் வந்துள்ளது. அதில் சிலருக்கு 70 ஆயிரம் டாலர் வரை திருப்பி தர வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய போது ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை கணக்கிடும் போது அமெரிக்க டாலரில் இருந்து ஆஸ்திரேலிய டாலருக்கு மாற்றும் போது தவறு ஏற்பட்டு விட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஊழியர்கள் 1,500 முதல் 70 ஆயிரம் டாலர் வரை திருப்பி தர வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது என ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


