எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கீவ் : புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. இப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இதற்கிடையே உக்ரைனுடன் போரை நிறுத்தி விட்டு பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புடின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும். நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருக்கிறது என்று புடின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, புடின் தெரிவித்துள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது ராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டார். அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை ஆகும்.
இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது. ஹிட்லர் செய்த அதே விஷயத்தை புடின் செய்கிறார். இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


