முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்முவில் கட்டப்பட்டு வரும் செனாப் பாலம் 2024 இறுதிக்குள் முடிக்கப்படும்: வடக்கு ரயில்வே

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      இந்தியா
Railway 2024-05-15

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் செனாப் பாலம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது

ஜம்மு காஷ்மீரில் கத்ரா - பனிஹால் பிரிவில் உதம்பூர் -ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். இந்த உயரம் பாரிஸ் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் என்பது சிறப்பாகும். 

செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் வழியாக ரம்பானில் இருந்து ரியாசிக்கு ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து கொங்கன் ரயில்வேயின் துணை தலைமை பொறியாளர் சுஜய் குமார் கூறுகையில், 

இந்த திட்டம் மிகவும் சவாலானது. இந்த திட்டத்தால் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று கூறினார்.

ரியாசி துணை கமிஷனர் விஷேஷ் மகாஜன் கூறுகையில், இது நவீன உலகின் பொறியியல் அதிசயம். ரயில் ரியாசியை அடையும் நாள், மாவட்டத்தையே மாற்றும் நாளாக இருக்கும். இது பெருமைக்குரிய தருணம். 

எங்களுடைய பொறியாளர்கள் ஒரு அற்புதத்தை உருவாக்கியிருப்பது பெருமையான தருணம். இது உலகின் 8-வது அதிசயமாகும். இந்த  பாலத்தை திறக்கும் சரியான தேதி சொல்ல முடியாது.ஆனால் அந்த நாள் விரைவில் வரும் என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து