எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10.20 மற்றும் ரூ.2.33 என குறைத்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 258.16 ஆகவும், எச்எஸ்டி விலை லிட்டருக்கு ரூ. 267.89 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் எரிபொருள் விலையை மதிப்பாய்வு செய்யும் அந்நாட்டு நிதிப் பிரிவு, சமீபத்திய விலைக் குறைப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த பதினைந்து நாட்களுக்கும் இந்த புதிய விலைகள் பொருந்தும் என்று கூறியது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (ஓக்ரா) நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கை இரட்டை இலக்க பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை மாதத்தில் தொடர்ந்து 3 முறை எரிபொருள் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


