Idhayam Matrimony

போர்க் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா - பிரான்ஸ் பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      இந்தியா
Rafale 2024-05-29

புது டெல்லி, இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவதற்காக, 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா - பிரான்ஸ் அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ஏற்கெனவே ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிக் 29 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக ரபேல் போர் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்த பேச்சுவார்த்தை ஜுன் 2-வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, பிரான்ஸ் அதிகாரிகள் குழுவினர் டெல்லி வந்துள்ளனர். 

அவர்களுடன் ராணுவ தளவாட கொள்முதல் பிரிவு இயக்குனரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் விமானத்தின் விலை உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து