முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரைக்கு இன்று வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      தமிழகம்
Sellur-Raju

Source: provided

மதுரை : மதுரைக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு காலை 6,30மணி அளவில் வருகிறார். மதுரைக்கு வருகை தரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

எனவே மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், , மாநில நிர்வாகிகள், இன்னாள்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி, வட்ட,பேரூராட்சி, எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி ,மாணவர் அணி, மகளிர் அணி, மருத்துவ அணி,வர்த்தக அணி ,இலக்கிய அணி, கலை பிரிவு, மீனவர் அணி, விவசாய பிரிவு, அமைப்புசாரா ஓட்டுனர் அணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு, இன்னாள், முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து