முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு எம்.பி. பதவி: ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்பு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா
Rahul 2024-04-03

Source: provided

புதுடெல்லி : வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் காந்தியின் கடிதத்தை மக்களவை இடைக்காலத் தலைவர் பர்த்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார். மேலும், ரேபரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக ராகுல் காந்தி தொடர்கிறார்.

18-வது மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸின் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் ரேபரேலி தொகுதி உறுப்பினராக தொடரவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வயநாடு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மக்களவை செயலகத்துக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பியிருந்தார். நேற்று காலை 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக இடைக்காலத் தலைவர் அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக ராகுல் காந்தி பதவியேற்கவுள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து