Idhayam Matrimony

பாகிஸ்தான் விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது: தலைமை தளபதி

சனிக்கிழமை, 31 மே 2025      இந்தியா
Anil-Chauhan-2025-05-31

புதுடெல்லி, “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான ஷாங்க்ரி-லா உரையாடலில் பேசிய இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், “இந்தியா - பாகிஸ்தான் உறவில், நாங்கள் மூலோபாயம் இல்லாமல் செயல்படவில்லை. நாம் சுதந்திரம் பெற்றபோது, ​​சமூக, பொருளாதார, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என ஒவ்வொரு அளவீட்டிலும் பாகிஸ்தான் நம்மை விட முன்னணியில் இருந்தது. இன்று, அதிக பன்முகத்தன்மை இருந்தபோதிலும் பொருளாதார செயல்திறன், மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நல்லிணக்கம் என அனைத்து முனைகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்தது போல, இந்தியா பல முறை ராஜதந்திர ரீதியாக பாகிஸ்தானை அணுகியது. அதற்கு அடுத்த ஆண்டு, பிரதமர் மோடி லாகூருக்கு ஒரு திடீர் வருகை தந்து ஷெரீப்பைச் சந்தித்து அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். ஆனால், கைதட்ட இரண்டு கைகள் தேவை. இருப்பினும் நமக்கு பதிலுக்குக் கிடைப்பது விரோதம் மட்டுமே என்றால், இப்போதைக்கு உறவை முறித்துக் கொள்வது ஒரு நல்ல உத்தியாக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து