Idhayam Matrimony

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி

சனிக்கிழமை, 31 மே 2025      உலகம்
drone 2024-04-29

Source: provided

பெரூட் : இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்தார்.

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனானின் நபதியா மாகாணம் டிர் இஸ் சஹ்ரானி பகுதியில் உள்ள சாலையில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரை குறிவைத்து இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காரில் பயணித்த ஹிஸ்புல்லா பயங்கரவாதி கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல்லா ஏவுகணை, ராக்கெட் பிரிவு தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து