எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் மாறிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போபாலில் நடந்த லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண் சக்தி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சக்தி வழிபாட்டின் போது, நாம் குங்குமம் வழங்குகிறோம். இது இன்று இந்தியாவின் வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. பஹல்காமில், பயங்கரவாதிகள் இந்தியர்களின் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தை பிளவுபடுத்த முயன்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகும். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் மாறிவிட்டது. இந்த நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எப்.) பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜம்மு முதல் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை வரை பி.எஸ்.எப். மகள்கள் முன்னணியில் இருந்தனர். எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுக்கு அவர்கள் வலுவான பதிலடி கொடுத்தனர். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் முதல் எதிரி நிலைகளை அழிப்பது வரை, பி.எஸ்.எப்.-ன் துணிச்சலான மகள்கள் தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர்.
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான முன்முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களிலிருந்து பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று, நமது பெண்கள் நவீன தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


