எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜகார்த்தா : இந்தோனேசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் காலை 9.30 மணியளவில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன.
இந்தச் சமபவத்தில் 13 தொழிலாளர்கள் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லையென மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஆறு முதல் எட்டு பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீட்புக்குழுவினரின் மீட்பு பணி தொர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


