Idhayam Matrimony

வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? பயணிகள் புகார்

சனிக்கிழமை, 31 மே 2025      இந்தியா
Vande-Bharat-train 2023 03

Source: provided

சென்னை : வந்தே பாரத் ரயிலில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் இருந்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து