எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : பாகிஸ்தான் மீதான போரில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு முப்படை தலைமை தளபதி விளக்கமளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது. இருப்பினும், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பதிலளித்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதையல்ல, ஏன் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைத்தான். இதில் நல்லது என்னவென்றால், போரின்போது எடுக்கும் உக்திகளில் மேற்கொண்ட தவறுகள் என்ன என்பதை கண்டறிய உதவியது. அதனைக் கண்டறிந்து சரி செய்து, சரியான உக்திகளை பயன்படுத்தி, மீண்டும் மிகச் சரியான தாக்குதலை, அடுத்த இரண்டு நாள்களில் தொலைதூர இலக்குகளைக் குறிவைத்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம் என்று கூறினார்.
இந்த பதிலில், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை மறைமுகமாகவே ஒப்புக்கொண்டிருந்தாலும், வீழ்த்தப்படவில்லை என்று அவர் முற்றிலும் மறுக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியாவின் 6 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்ததை அனில் சௌகான் மறுத்து விட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


