எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. உத்தங்குடி, கலைஞர் திடலில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவரும், முதல்வரமான மு.க.ஸ்டாலின் தலமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 1) மதுரையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, உத்தங்குடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் 90 ஏக்கரில் பரந்து விரிந்த பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பந்தலில் குளிர்சாதன வசதிகள், வண்ண விளக்குகள், பசுமை புல்வெளிகள், செயற்கை நீருற்றுகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நுழைவு வாயில், சென்னை அண்ணா அறிவாலயத்தை ஒத்த தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கட்-அவுட்கள், தி.மு.க. அரசின் சாதனைகளை சுட்டி காட்டும் பதாகைகள் மற்றும் 100 அடி உயர கொடிக்கம்பம் ஆகியவை அரங்கின் அமைப்பை கூட்டுகின்றன. இதில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன் உள்ளிட்டோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தனியார் நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
பிறகு நேற்று மாலை, அவ்விடமிருந்து கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு செல்லும் முதல்வர், அங்கிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், டி.வி.எஸ்.நகர், பழங்காநத்தம், வ.உ.சி. பாலம், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்றது.
ரோடு ஷோவின் ஒரு பகுதியாக ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மேற்கூரையையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, மேயர் முத்து சிலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல முக்கிய அரசியல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்வரும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதே நேரத்தில் முதல்வர் பயணிக்கும் பகுதிகளில் ட்ரோன் பறக்க விட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


