Idhayam Matrimony

இதுவரை 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சனிக்கிழமை, 31 மே 2025      தமிழகம்
Ma-Supramanian-2025-05-31

சென்னை, “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (மே.31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது. ஆனால், இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, மக்கள் இது குறித்து பதற்றம் அடையத் தேவையில்லை. புனே ஆய்வு மையத்துக்கு, தமிழகத்திலிருந்து 17 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

மத்திய சுகாதார அமைச்சகம், முகக் கவசம் அணிவது நல்லது என்று தெரிவித்துள்ளது. அதையேத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். முகக்கவசம் அணிவது நல்லதே தவிர, எதுவுமே கட்டாயம் கிடையாது. அதுவும், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது.

 தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும் எல்லா வசதிகளும் சரியாக உள்ளது. இந்தச் சூழலில் கொரோனா பரவல் பற்றிய வதந்திதகளை யாரும் பரப்பாதீர்கள். வதந்தி தான் பெரிய நோய்.  கொரோனா தொற்றைப் பொருத்தவரையில், மத்திய அரசு வழிகாட்டுதல்களை எப்போதும் நாம் பின்பற்றுகிறோம். அதேபோல், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. பருவமழைக் காலம் என்பதால் காய்ச்சல் முகாம்களும் நடத்துகிறோம்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து