Idhayam Matrimony

கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது : ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      தமிழகம்
Sanjay-Singh 2023-10-04

Source: provided

புதுடெல்லி : டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க.வும், மத்திய அரசும் விளையாடி கொண்டிருக்கிறது என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபை எம்.பி. சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது, 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க.வும், மத்தியில் உள்ள அதன் அரசும் விளையாடி கொண்டிருக்கிறது. அவருடைய உடல் எடை 8.5 கிலோ வரை குறைந்துள்ளது.  சிறையில் இருந்தபோது, அவருக்கு ரத்த சர்க்கரை அளவும் வெகுவாக குறைந்து போனது.

எனினும், பா.ஜ.க. இதற்கு பதில் எதுவும் தரவில்லை.  அவரை சிறையில் இருந்து விரைவாக வெளியே கொண்டு வந்து, மருத்துவ சிகிச்சை அளித்திருக்கவில்லை என்றால், அவருக்கு ஏதேனும் தீவிர விளைவுகள் ஏற்பட்டிருக்க கூடும்.

அமலாக்க துறையால் பணமோசடி வழக்கில், கடந்த மார்ச் 21-ம் தேதி, கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது, அவருடைய உடல் எடை 70 கிலோவாக இருந்தது.  அவருடைய உடல் எடை தற்போது, 61.5 கிலோவாக உள்ளது. தொடர்ச்சியான இந்த உடல் எடை குறைவுக்கு காரணம் தெரியவில்லை.  

இந்த உடல் எடை குறைவானது, சில தீவிர வியாதிக்கான அறிகுறியாக இருக்கலாம். சிறையில் உள்ள அவருடைய உடல்நிலையை பற்றி கெஜ்ரிவாலின் குடும்பம், ஆம் ஆத்மி மற்றும் அவருடைய நலம் விரும்பிகள் வருத்தத்தில் உள்ளனர்.  

 

பா.ஜ.க. மற்றும் மத்தியில் உள்ள அதன் அரசின் நோக்கம், அவரை சிறையில் வைத்து, அவருடைய வாழ்க்கையில் விளையாட வேண்டும் என்பதே ஆகும். இதனால், அவருக்கு சில தீவிர உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் சதி திட்டம் தீட்டி வருகின்றனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து