முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்து புதிய தகவல்கள் வெளியானது

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      உலகம்
Trump 2024-07-14

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் தனியாக, மன அழுத்தத்துடன் இருந்தவர், பள்ளியின் துப்பாக்கிச் சூடும் பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் இருந்தபோதும் தனியாகவே இருந்துவந்துள்ளார் எனவும், அவர் ஏதோ விரக்தியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டாலும், டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடுக்கு இதுவரை எந்தக் காரணமும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரும் நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லர் பகுதியில் டிரம்ப் சனிக்கிழமை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் கூட்டத்தில் தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென தொலைவில் இருந்து நபர் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டார்.இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. தோட்டா உரசிச் சென்றதை உணர்ந்த டிரம்ப் ஒலிவாங்கி (மைக்) மேடைக்கு கீழே உடனடியாக குனிந்து தற்காத்துக் கொண்டார். சுற்றியிருந்த சிறப்புப் பாதுகாவலர்கள் சட்டென சுதாரித்து அரண் போல சூழந்து அவரைக் காத்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டிரம்ப்பின் காதில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில், அவர் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச்சூட்டின்போது, டிர்ம்ப் பின்னால் இருந்த கூட்டத்தில் பங்கேற்ற பார்வையாளர்களில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் பலத்த காயமடைந்தனர். அப்போது, டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது. டிரம்ப்பை தாமஸ் சுட்டபின், சிறப்புப் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டதில் தாமஸ் உயிரிழந்தார்.

தற்போது, இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு என்ன காரணம் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவருடைய குடும்ப உறவினர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், உடன் பணியாற்றியவர்கள் யாருமே இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை, ஆனாலும் இவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்ததாகக் கூறுகிறார்கள். அவர் சமூக ஊடகங்களிலும் அவ்வளவாக பயன்படுத்தியதில்லை என்பதும், இதுபோன்ற ஒரு திட்டத்தை தீட்டியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து