முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி: அமித்ஷா

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2024      இந்தியா
Amit-Shah 2023-11-17

Source: provided

சண்டிகர் : அரியானா மாநிலத்தில் இந்த வருடத்தின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது எனக் கூறினார்.

இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:- 1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வழங்கிய பரிந்துரைகள் பல வருடங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. 1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கர்நாடகாவில் நடந்தது போன்று நடந்திருந்திருக்கும். அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட் அமைக்கும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து