எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இரு சக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் அபிஷேக் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணித்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே, அவரது கணவர் மற்றும் அசோக் பாண்டா என்ற நபர் ஆகியோர் ஆள் வைத்து அபிஷேக் குப்தாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பூஜா ஷகுன் பாண்டே வீட்டில் வெகு காலமாக வேலை பார்த்த முகமது பைசல் மற்றும் ஆசிப் என்ற இரண்டு கூலிப்படையினர் மூலம் இந்த கொலை அரங்கேறி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே முகமது பைசல் மற்றும் ஆசிப், பூஜாவின் கணவர் ஆகியிரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்திற்குப் பிறகு பூஜா சகுன் பாண்டே தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பூஜாவை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இந்து சபா தலைவி பூஜா ஷகுன் பாண்டே முன்னதாக மகாத்மா காந்தி கொலையை நடித்துக்காட்டும் விதமாக அவரது உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நடித்துக்காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


