Idhayam Matrimony

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட போராட்டக்குழு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2025      தமிழகம்
Paranthur 2025-10-12

Source: provided

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்காக ஏகனாபுரம் மக்கள் தங்களுடைய விவசாய நிலத்தையும், பாரம்பரியமான பூர்வீக குடியிருப்புகளை ஒருநாளும் விட்டு கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதால் போராட்ட குழுவின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது போராடும் மக்களுக்கு நல்ல தீர்ப்பு வரும். போராட்டக் குழு நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் நம்முடைய ஏகனாபுரம் ,கிராம மக்கள் மத்தியில் இன்னும் 4 நாட்களில் உங்களுடைய நிலத்தின் பத்திரங்களை ஒப்படைக்க பட வேண்டும் என்ற பொய் தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இது போன்ற அரசு அதிகாரிகளால் பரப்பபடும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து