முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
MR-Vijjyabaskar 2024-07-07

Source: provided

சென்னை : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர். ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

வருகிற 31-ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு, கேரளா விரைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்மாநிலத்தில் வைத்து எம்.ஆர். விஜய பாஸ்கரை கைது செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து