Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேடு: 3 மாணவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Neet 2023-04-20

Source: provided

பாட்னா: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், எய்ம்ஸ் - பாட்னா கல்லூரியை சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவர்கள் மூன்று பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யா மற்றும் ராஜூ சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் - பாட்னா மாணவர்களின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டு கும்பலுடன், இந்த மாணவர்கள் தொடர்பில் இருந்துள்ளது கேள்விக்குறியாகியிருக்கிறது. வினாத்தாள் கசிவில் தொடர்புடைய கும்பலுக்கு இந்த மாணவர்கள்தான், வினாத்தாளுக்கான விடைகளைக் கொடுப்பது போன்றவற்றை செய்து கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மாணவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 2021ம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தவர்கள் ஆவர்.  இதை அடுத்து அவர்களை சிபிஐ அதிகாரிகள், மாணவர் விடுதியிலிருந்து அழைத்துச் சென்று, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

நீட் முறைகேடு தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேசிய தேர்வு முகமை மையத்திலிருந்து நீட் தேர்வின் வினாத்தாள்களை திருடிய குற்றச்சாட்டில் 2 பேரை சிபிஐ ஜூலை 16ஆம் தேதி கைது செய்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள என்டிஏ மையத்தில் இருந்து நீட் வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பங்கஜ் குமார் (எ) ஆதித்யா என்பவர் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். இவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள என்ஐடி-யில் பட்டம்பெற்றவர்.

வினாத்தாள்களை திருட பங்கஜ் குமாருக்கு உதவியதுடன் பிற குழுக்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் ராஜூ சிங் என்பவரும் ஹசாரிபாக்கில் கைது செய்யப்பட்டார். நீட் முறைகேடு தொடர்பாக 6 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த முக்கிய குற்றவாளிகள் கைதாகியிருப்பது வழக்கில் பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்தான் தற்போது எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து