முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
MR-Vijjyabaskar 2024-07-07

Source: provided

கரூர்: சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை மற்றொரு வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கரூர் வாங்கலைச் சேர்ந்த பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மீண்டும் சிறையில் உள்ள விஜயபாஸ்கரை வியாழக்கிழமை காலை கைது செய்தனர். இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் இன்று அல்லது நாளை விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து