முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
Bahavanth-maan 2023-06-01

Source: provided

புதுடெல்லி :  ஒலிம்பிக் போட்டிகளை காண பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.

பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுக்கு பின் இந்திய ஹாக்கி அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. 

இன்று  (ஆகஸ்ட் 4) இந்திய ஹாக்கி அணி விளையாட உள்ள காலிறுதிப் போட்டியை நேரில் காண பகவந்த் மான் திட்டமிட்டு இருந்தார்.  இந்நிலையில், நேற்று  தாமதமாக விண்ணப்பம் அளித்ததை காரணம் காட்டி பகவந்த் மான் பிரான்ஸ் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. 

இது குறித்து முதல்வர் பகவந்த்மான் கூறுகையில், '

இந்திய ஒலிம்பிக் அணியில், பஞ்சாப் வீரர்கள் மட்டும் 19 பேர் உள்ளனர். ஹாக்கி அணியில் இருக்கும் வீரர்களில் 10 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இந்திய அணி, வலு மிகுந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாக்கியில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தான், இந்திய அணி கால் இறுதியில் விளையாடுவதை நேரில் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பம் தரப்பட்டது. அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதே போல 2022-ல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கேட்ட போதும் மத்திய அரசு மறுத்து விட்டது. ஒவ்வொரு பிரச்னைக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு செல்லட்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து