முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை: எடப்பாடி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை,  கன்னியாகுமரி என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு எனது கடும் கண்டனம். தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? ஆகவே சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை  இனியாவது எடுக்குமாறு  தி.மு.க. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து