முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Raghupathi 2023 04 07

Source: provided

புதுக்கோட்டை : தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை அருகே திருமயம் அருகே கடையக்குடியில் நேற்று புதிய சமத்துவபுரம் கட்டுமானப் பணியை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஒரு ஆட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். அதற்காக நனிநபர் விரோதத்தினால் நடக்கும் கொலை சம்பவத்தை அரசோடு தொடர்புபடுத்துவது தவறு.  இது போன்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்றாலும், தடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதனால் முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதைத்தான் செய்ய முடியுமே தவிர, ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன இருக்கிறது? என்று ஊடுருவிச் சென்று பார்க்க முடியாது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைவாகத்தான் உள்ளது. அதனால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று கூறுகிறோம்.

இம்மாதம் தமிழகத்தில் நிறைய தொழிற்சாலைகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். அமைதி பூங்காவாக இருப்பதனால்தான் தொழில் அதிபர்கள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். புதுக்கோட்டையில்  பழுதடைந்துள்ள பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து