முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்க டெல்லி துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம்: மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டெல்லி, டெல்லி மாநகராட்சிக்கு நிபுணர்கள் 10 பேரை நியமிக்கும் அதிகாரம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் உள்ளார். அவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்ட நிபுணர்கள் (ஆல்டர்மென்) 10 பேரை துணைநிலை ஆளுநர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 

டெல்லி மாநகராட்சிக்கு சிறப்புத் திறனாளர்களை நியமிக்கும் அதிகாரம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உண்டு. டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தில் சிறப்புத் திறன் கொண்ட 10 பேரை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநரின் அலுவலகத்துக்கு சொந்தமான சட்டப்பூர்வ கடமை.

இது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதோ, அரசின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட வேண்டும் என்பதோ கட்டாயம் கிடையாது. துணைநிலை ஆளுநருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது.

டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரம் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1957-ன் பிரிவு 3(3)(பி)(1)-ல் இருந்து பெறப்பட்டது. 10 நிபுணர்களை நியமிக்கும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு அளிக்கும் வகையில் 1993-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தது.

முன்னதாக, டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 

தேசிய தலைநகரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கிறது. துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமல் அதன் சொந்த நகராட்சி நிர்வாகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், டெல்லி துணைநிலை ஆளுநர், அவருக்கு உள்ள அதிகாரத்தின்படி இயங்க வேண்டும். அரசு அல்லது அமைச்சரவையின் ஆலோசனையின்படி இயங்கக்கூடாது என தெளிவுபடுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து