முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா
Murmu 2023 04 18

புது டெல்லி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயக சதுர்த்தியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த மகிழ்ச்சியான திருவிழா அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதே வேளையில், பணிவு மற்றும் கடமையைத் தழுவுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.  

பிரதமர்  மோடி  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா என்று பதிவிட்டுள்ளார்.   

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்ரீ கணேஷ் சதுர்த்தியின் அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தத் திருநாளில் உங்கள் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியையும் செழுமையையும் தருமென நம்புகிறேன் என  குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அன்னை பார்வதி மற்றும் தந்தை சிவன் ஆகியோரின் அன்பு மகனான கணேஷனுக்கு  விநாயக சதுர்த்தி. இந்த புனித நாளில், கணபதி பாப்பா மோரியாவின் கோஷங்கள் வானத்தை முட்டும் அளவிற்கு எதிரொலிக்கும். அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து