முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கு: வேலூர் கோர்ட்டில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Kadir-Anand-2024-09-12

வேலூர்,  2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் தி.மு.க. எம்.பி., கதிர்ஆனந்த் நேற்று ஆஜரானார்.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கதிர் ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் தாமோதரனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் இருந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் புத்தம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, காட்பாடி காவல் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக வேலூர் தொகுதி எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் நேற்று ஆஜரானார். அதை தொடர்ந்து வழக்கை அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சத்தியகுமார் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து