முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியின் வேட்டையன் பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      சினிமா
Vettaiyan

Source: provided

சென்னை : ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. காவல்துறை என்கவுன்டரை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து  இன்று 10-ம் தேதி ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து