முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் விமானிக்கு மாரடைப்பு: விமானத்தை தரையிறக்கிய மனைவி

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      உலகம்
Air

லாஸ்வேகாஸ், அமெரிக்காவில் 5,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மனைவி அந்த விமானத்தை தரையிறக்கினார்.  

அமெரிக்காவின் லாஸ் வேகாசை சேர்ந்த தொழிலதிபர் எலியாட் ஆல்பெர்(78). இவர், மனைவி யுவோனி கினானே வெல்ஸ்(60) உடன் சிறிய விமானத்தில் பயணித்தார். விமானம் 5,900 கி.மீ., தூரம் சென்ற நிலையில் கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், மனைவிக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

அவரிடம் பேசிய அதிகாரிகளிடம், தனக்கு விமானத்தை இயக்க தெரியாது எனக்கூறி அவர்களுக்கும் திகிலை ஏற்படுத்தினார். உடனடியாக சுதாரித்த அதிகாரிகள், விமானத்தை தரையிறக்குவது குறித்து ஒவ்வவொரு நடவடிக்கையாக பொறுமையாக கூறினர். 

அதன் படியே , யுவோனி கினானே வெல்சும் செயல்பட்டு விமானத்தை மெதுவாக அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கினார். அவருக்கு போதிய முன் அனுபவம் இல்லாததால், விமானத்தை தரையிறக்க அங்கிருந்த 11 ஆயிரம் அடி நீள ஓடுபாதையையும் அவர் பயன்படுத்தினார். 

ஒரு வழியாக விமானம் நின்றதும் அவசர கால ஊழியர்கள் விமானத்திற்கு விரைந்து வந்து எலியாட் ஆல்பெரை பரிசோதித்தனர். ஆனால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.  இது குறித்து விமான நிலைய இயக்குநர் கூறுகையில், 

இந்த நிகழ்வு எதிர்பாராதது. இதுபோன்று எனது வாழ்க்கையில் பார்த்தது கிடையாது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து