Idhayam Matrimony

வரும் 10ம் தேதி முதல் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சக்கம் முடிவு செய்துள்ளது.

லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சர்யுமான சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சக்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 33 பாதுகாப்பு பணியாளர்கள் 24 மணி நேரமும் பாஸ்வானைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுத் துறை சார்பில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சிராக் பாஸ்வானுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாதுகாப்புத் தொடர்பான காரணங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

அக்.10 முதல் சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, இரண்டாவது உயரிய பாதுகாப்பான 'ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை' (எஸ்.எஸ்.பி) சார்பில் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து