எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் பிராமணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.
பொது இடத்தில் ஒரு சமூகத்தை அவதூறாகப் பேசிவிட்டு வருத்தம் தெரிவிப்பதால், அந்த சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க முடியாது. மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாது பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார்.
கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் வாதிடுகையில், “சென்னைக் கூட்டத்தில் மனுதாரர் சிலரை குறிப்பிட்டே அவ்வாறு பேசினார். மொத்த சமூகத்துக்கு எதிராகவும் அவர் பேசவில்லை. இருப்பினும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது இல்லை. இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதி, “குறிப்பிட்ட சிலர் குறித்து தான் மனுதாரர் அவ்வாறு பேசினார் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட சிலரை பற்றி பேசும் போது அந்தப்புரம் ஏன் வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? மனுதாரர் வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு, அவர் பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்றார்.
சென்னைக் கூட்டத்தில் ஒரே கொள்கை உடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவரைப்போல் மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார். இதையடுத்து, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக நவ.14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.